திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

வெள்ளி, 22 அக்டோபர், 2010

பாஸ்போர்ட் சந்தேகமா? டயல் பண்ணுங்க, தகவல் பெறுங்க

பாஸ்போர்ட் சந்தேகமா? டயல் பண்ணுங்க, தகவல் பெறுங்க   பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்கள் மற்றும் விசாரணைக்காக 3 தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது: புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் 3 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 அவற்றில் தொடர்பு கொண்டால் சந்தேகங்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பெறுதல் குறித்த சந்தேகங்களை 0431-2700699, 2707203, 2707404 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம். அலுவலக நாட்களில் இந்த தொலைபேசிகளை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்
மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ பிடித்ததாக எழும்பிய தவறான அலாரத்தினால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்கும் ஓடியதிலும், மேலே இருந்து குதித்ததிலும் 15 பேர் காயமுற்றனர். சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இரவில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு : ஜெட் ஏர்வேஸ் ( 9 w 2302 ) விமானம் நேற்று மும்பையில் இருந்து 9 மணி அளவில் புறப்பட்டது . இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். மேலே கிளம்பிய சில நிமிடத்தில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீ பிடிப்பதாக சில பயணிகள் தெரிவித்தனர்.

பைலட்டுக்கு தெரிய வந்ததும் அவர் அபாய அலாரம் எழுப்பினார். பயணிகள் வெளியேறுமாறு கமாண்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிலருக்கு எலும்பு முறிவு: இதனையடுத்து இந்த அலார சப்தம் கேட்டதும் பயணிகள் பரிதவித்து போயினர். என்ன நடக்கப்போகிறதோ என மனம் பதை, பதைத்ததும் , பயணிகள் விமானத்திற்குள் இருந்து அங்கும், இங்குமாக ஓடினர். சில பயணிகள் கீழே குதித்தனர்.

இதனையடுத்து விமானம் அவசர, அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அனைத்து விமானிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 15 பயணிகள் காயமுற்றனர். 5 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

விமானத்தில் தீ எதுவும் பிடிக்கவில்லை, தீ போல ஒளி தெரிந்துள்ளது. இதனை தீ என பயணிகள் கருதி விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அலாரம் எழுப்பப்பட்டது என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. சென்னை வரவிருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு தாமதமாக நள்ளிரவில் 2 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.

சென்னை வந்த பயணியில் ஒருவர் கூறுகையில்; நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளோம். புகை வந்த விஷயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால் எல்லோரும் உயிரை காப்பாற்றிட என்ன செய்வது என்று திகைத்து போனோம் என்றார்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

சுதந்திர தின பாதுகாப்பு: சென்னை-திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை

ராஜகிரி: சுதந்திர தின பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. விமான நிலையத்துக்குள் நுழைவு டிக்கெட் வாங்கி பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நுழைவு டிக்கெட் விற்பனையும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் விமான நிலைய போர்டிகோ வரை மட்டுமே பார்வையார்கள் செல்ல முடியும். அதே போல திருச்சி உள்பட பல விமான நிலையங்களிலும் இந்தத் தடை விதி்க்கப்பட்டுள்ளது.

வரும் 20ம் தேதி வரை தடை நீடிக்கும் என்று தெரிகிறது

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ராஜகிரி;2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

ராஜகிரி; 2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

05.08.10 விமான பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக நஷ்டஈடு கோரலாம் என்று விமான போக்கு வரத்துத்துறை அறிவித்துள்ளது. இதற்காக கொள்கை திட்ட பரிந்துரைகள் சிலவற்றை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.


ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக வருமானால், அதில் பயணம் செய்யும் பயணிகள் நஷ்டஈடு கோரலாம். ஆனால் அந்த தாமதத்துக்கு விமான நிறுவனம் நேரடி காரணமாக இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் பயணிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை இழப்பீடு தொகை பெற முடியும். 24 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு, தங்கும் வசதி போன்றவற்றை விமான நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும். அதை பெறும் உரிமை பயணி களுக்கு உள்ளதாக விமானப்போக்குவரத்துத் துறை கூறி உள்ளது.

விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பயணிகளுக்கு உதவும் வழி காட்டி குறிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (வியாழன்) முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

நஷ்டஈடு பெற விரும்பும் பயணிகள் நுகர்வோர் கோர்ட்டை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

செவ்வாய், 27 ஜூலை, 2010

ராஜகிரி: பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி?

ராஜகிரி:  28.07.10 பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி?

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மலைப் பகுதியில் பயணிகள் விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 152 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


துருக்கியிலிருந்து கராச்சி நோக்கி 152 பயணிகளுடன் ஏர் ப்ளூ விமானம் ஒன்று புறப்பட்டது. இன்று காலை இஸ்லாமாபாத் அருகே மர்கல்லா மலைப்பகுதியை ஒட்டி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதில் சிறப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.







திங்கள், 26 ஜூலை, 2010

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பழுது

ராஜகிரி, ஜூலை 23: அபுதாபி - திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பழுதானதால் வெள்ளிக்கிழமை திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது.


அபுதாபி - திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. ஆனால், இந்த விமானத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், இந்த விமானத்தில் சென்னை செல்வதாக இருந்த 44 பயணிகள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.விமானத்தில் பழுது சரிபார்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை சென்றது.

ராஜகிரி : சென்னை-ஜெத்தா விமானத்தில் தீ: விபத்து தவிர்ப்பு

ராஜகிரி: சென்னையில் இருந்து ஜெத்தா செல்ல இருந்த செளதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் டேக்-ஆப் செய்வதை விமானி தவிர்த்துவிட்டதால் விபத்திலிருந்து தப்பியது.


180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு செளதி ஏர்வேஸ் எஸ்.சி-769 விமானம் இன்று காலை புறப்படத் தயாரானது. அதி்ல் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.

விமானம் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டு புகை பரவியது. இதைக் கண்ட விமானி உடனடியாக விமானம் டேக்-ஆப் ஆவதைத் தவிர்த்துவிட்டு ரன்வேயிலேயே நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் அவசர. அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் சோதனையிடப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்ட பின் 3 மணி நேரம் தாமதமாக மீண்டும் கிளம்பிச் சென்றது

ஞாயிறு, 27 ஜூன், 2010

ராஜகிரி : திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்

ராஜகிரி : திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விமானநிலைய மேம்பாடு கட்டணம்  அமலுக்கு வந்தது.திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட பயணிகள் விமானம் மூலம் செல்கின்றனர்.

 தவிர, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அண்டை மாநிலங்கள், கோவை, மதுரை, சென்னை விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

திருச்சி விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய "டெர்மினல்' கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. புதிய "டெர்மினல்' கட்டப்பட்டதை முன்னிட்டு, பயணிகளிடமிருந்து விமான நிலையம் மேம்பாடு கட்டணம் வசூலிக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.