திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு ('டேட் ரேன்ஜ் பேர்')

கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டணத்தை, ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுகுறித்து ஏர்இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்கேற்ப, சவுகரியமான, சுலபமான மற்றும் சிக்கனமான, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், நாட்டின் 141 இடங்களுக்கு பயணிக்கலாம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு, 3 அல்லது 5 நாட்களுக்கு முன் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும், ஆமதாபாத், நாக்பூர், அவுரங்காபாத், லக்னோ, இந்தூர், சண்டிகார், ஜெய்ப்பூர், மதுரை, கோவை, கவுகாத்தி, இம்பால் உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லலாம்.


வழக்கமான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதை பொறுத்தும், விமானத்தில் இருக்கைகள் இருப்பதை பொறுத்தும், அதற்கேற்ப, 'டேட் ரேன்ஜ் பேர்'க்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். இதுதவிர, 7 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள் கொண்ட, 'அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்ஷன்' என்ற, பயணிகளுக்கு பயன் அளிக்கும் திட்டமும் உள்ளது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

திருச்சியில் இருந்து செல்லும் துபாய் விமானம் தாமதம் பயணிகள் கடும் அவதி

திருச்சியில் இருந்து செல்லும் துபாய் விமானம் தாமதம் பயணிகள் கடும் அவதி

19.04.2011 திருச்சியில் இருந்து துபாய் செல்லும் விமானம் தாமதமானதால், பயணிகள் 5 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தினமும் இயக்கப்படுகிறது. நேற்று காலை 10.35 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரும் ஏர்இந்தியா விமானம் 11.40 மணிக்கு துபாய் செல்ல வேண்டும். ஆனால் விமானம் நேற்று மாலைக்கு பின்னரே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விமானம் வருவதற்கு 3 மணிநேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இமிகிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகள் முடித்து காத்திருந்தனர்.

இதற்கிடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது. அந்த விமானம் மும்பையிலிருந்து மாலை 4.05க்கு திருச்சி வந்தது. பின்னர் அதில் மாலை 5 மணியளவில் 124 பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.