திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

செவ்வாய், 22 மார்ச், 2011

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் இஷ்டத்துக்கும் கட்டணங்களை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளன தனியார் விமான நிறுவனங்கள்.
கடந்த தீபாவளி சீஸனில் பல மடங்கு கட்டணங்களை ஏற்றி வசூல் பார்த்தன இந்த விமான நிறுவனங்கள். டெல்லி - மும்பை மார்க்கத்தில் 5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலித்தனர். இதைத் தொடர்ந்து அரசு தலையிட்டு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியது.
இப்போது, ஹோலி பண்டிகை சீஸன் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது டெல்லி, மும்பை, லக்னோ, புனே உள்ளிட்ட செக்டார்களில். இந்த மார்க்கத்தில் செல்லும் தனியார் விமானங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. கோ ஏர் போன்ற குறைந்த கட்டண விமானங்களில் 200 சதவீத உயர்வு காணப்பட்டது.
டெல்லி - மும்பைக்கு வெள்ளிக்கிழமை மாலை ஜெட் ஏர்வேஸில் ரூ 16,400 வசூலித்தனர். கிங் பிஷரில் ரூ 14800 வசூலிக்கப்பட்டது. சாதாரண நாட்களில் இந்த மார்க்கத்தில் அதிகபட்ச கட்டணமே ரூ 5000 முதல் 6000க்குள்தான். வழக்கமாக ரூ 4000 வசூலிக்கும் கோஏர், இந்த வார இறுதியில் ரூ 9,706 வசூலித்தது.
இதேபோல டெல்லி - லக்னோவுக்கு சாதாரண நாட்களில் ரூ 3000க்குள்தான் கட்டணம் இருக்கும். ஆனால் இந்த முறை ரூ9000க்கும் அதிகமாக வசூலித்தனர். அதிலும் கோ ஏர் விமானத்தில் மட்டும் ரூ 14306 வசூலித்தது பயணிகளை அதிர வைத்தது.
அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிலையான ஒரு கட்டண விகிதத்தை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்