திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight
கட்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு

கோடை சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு ('டேட் ரேன்ஜ் பேர்')

கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டணத்தை, ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுகுறித்து ஏர்இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்கேற்ப, சவுகரியமான, சுலபமான மற்றும் சிக்கனமான, 'டேட் ரேன்ஜ் பேர்' என்ற சலுகை கட்டண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், நாட்டின் 141 இடங்களுக்கு பயணிக்கலாம்.


தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு, 3 அல்லது 5 நாட்களுக்கு முன் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும், ஆமதாபாத், நாக்பூர், அவுரங்காபாத், லக்னோ, இந்தூர், சண்டிகார், ஜெய்ப்பூர், மதுரை, கோவை, கவுகாத்தி, இம்பால் உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லலாம்.


வழக்கமான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதை பொறுத்தும், விமானத்தில் இருக்கைகள் இருப்பதை பொறுத்தும், அதற்கேற்ப, 'டேட் ரேன்ஜ் பேர்'க்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். இதுதவிர, 7 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள் கொண்ட, 'அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்ஷன்' என்ற, பயணிகளுக்கு பயன் அளிக்கும் திட்டமும் உள்ளது.

செவ்வாய், 22 மார்ச், 2011

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் இஷ்டத்துக்கும் கட்டணங்களை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளன தனியார் விமான நிறுவனங்கள்.
கடந்த தீபாவளி சீஸனில் பல மடங்கு கட்டணங்களை ஏற்றி வசூல் பார்த்தன இந்த விமான நிறுவனங்கள். டெல்லி - மும்பை மார்க்கத்தில் 5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலித்தனர். இதைத் தொடர்ந்து அரசு தலையிட்டு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியது.
இப்போது, ஹோலி பண்டிகை சீஸன் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது டெல்லி, மும்பை, லக்னோ, புனே உள்ளிட்ட செக்டார்களில். இந்த மார்க்கத்தில் செல்லும் தனியார் விமானங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. கோ ஏர் போன்ற குறைந்த கட்டண விமானங்களில் 200 சதவீத உயர்வு காணப்பட்டது.
டெல்லி - மும்பைக்கு வெள்ளிக்கிழமை மாலை ஜெட் ஏர்வேஸில் ரூ 16,400 வசூலித்தனர். கிங் பிஷரில் ரூ 14800 வசூலிக்கப்பட்டது. சாதாரண நாட்களில் இந்த மார்க்கத்தில் அதிகபட்ச கட்டணமே ரூ 5000 முதல் 6000க்குள்தான். வழக்கமாக ரூ 4000 வசூலிக்கும் கோஏர், இந்த வார இறுதியில் ரூ 9,706 வசூலித்தது.
இதேபோல டெல்லி - லக்னோவுக்கு சாதாரண நாட்களில் ரூ 3000க்குள்தான் கட்டணம் இருக்கும். ஆனால் இந்த முறை ரூ9000க்கும் அதிகமாக வசூலித்தனர். அதிலும் கோ ஏர் விமானத்தில் மட்டும் ரூ 14306 வசூலித்தது பயணிகளை அதிர வைத்தது.
அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிலையான ஒரு கட்டண விகிதத்தை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்த விலை உயர்வு பயணிகளை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை ஒன்பதாவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியல், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருளுக்கு கூடுதலாக ரூ.2,104 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் இப்போது ரூ.53,538-ஆக விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.53,538-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம்தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து விமான சேவை நிறுவனங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக, டிக்கெட் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் எந்த அறிவிப்புமின்றி 2 முறை டிக்கெட் விலையை உயர்த்திவிட்டது நினைவிருக்கலாம்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ராஜகிரி;2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

ராஜகிரி; 2 மணி நேரத்துக்கு மேல் விமானம் தாமதமானால் ரூ.2 ஆயிரம் நஷ்டஈடு; புதிய திட்டம் அமலுக்கு வந்தது

05.08.10 விமான பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக நஷ்டஈடு கோரலாம் என்று விமான போக்கு வரத்துத்துறை அறிவித்துள்ளது. இதற்காக கொள்கை திட்ட பரிந்துரைகள் சிலவற்றை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.


ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக வருமானால், அதில் பயணம் செய்யும் பயணிகள் நஷ்டஈடு கோரலாம். ஆனால் அந்த தாமதத்துக்கு விமான நிறுவனம் நேரடி காரணமாக இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் பயணிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை இழப்பீடு தொகை பெற முடியும். 24 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு, தங்கும் வசதி போன்றவற்றை விமான நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும். அதை பெறும் உரிமை பயணி களுக்கு உள்ளதாக விமானப்போக்குவரத்துத் துறை கூறி உள்ளது.

விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பயணிகளுக்கு உதவும் வழி காட்டி குறிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (வியாழன்) முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

நஷ்டஈடு பெற விரும்பும் பயணிகள் நுகர்வோர் கோர்ட்டை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஞாயிறு, 27 ஜூன், 2010

ராஜகிரி : திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்

ராஜகிரி : திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விமானநிலைய மேம்பாடு கட்டணம்  அமலுக்கு வந்தது.திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட பயணிகள் விமானம் மூலம் செல்கின்றனர்.

 தவிர, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அண்டை மாநிலங்கள், கோவை, மதுரை, சென்னை விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

திருச்சி விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய "டெர்மினல்' கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. புதிய "டெர்மினல்' கட்டப்பட்டதை முன்னிட்டு, பயணிகளிடமிருந்து விமான நிலையம் மேம்பாடு கட்டணம் வசூலிக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.