திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

செவ்வாய், 27 ஜூலை, 2010

ராஜகிரி: பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி?

ராஜகிரி:  28.07.10 பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி?

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மலைப் பகுதியில் பயணிகள் விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 152 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


துருக்கியிலிருந்து கராச்சி நோக்கி 152 பயணிகளுடன் ஏர் ப்ளூ விமானம் ஒன்று புறப்பட்டது. இன்று காலை இஸ்லாமாபாத் அருகே மர்கல்லா மலைப்பகுதியை ஒட்டி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதில் சிறப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.







திங்கள், 26 ஜூலை, 2010

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பழுது

ராஜகிரி, ஜூலை 23: அபுதாபி - திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பழுதானதால் வெள்ளிக்கிழமை திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது.


அபுதாபி - திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. ஆனால், இந்த விமானத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், இந்த விமானத்தில் சென்னை செல்வதாக இருந்த 44 பயணிகள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.விமானத்தில் பழுது சரிபார்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை சென்றது.

ராஜகிரி : சென்னை-ஜெத்தா விமானத்தில் தீ: விபத்து தவிர்ப்பு

ராஜகிரி: சென்னையில் இருந்து ஜெத்தா செல்ல இருந்த செளதி ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது அதன் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து கடைசி நேரத்தில் டேக்-ஆப் செய்வதை விமானி தவிர்த்துவிட்டதால் விபத்திலிருந்து தப்பியது.


180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு செளதி ஏர்வேஸ் எஸ்.சி-769 விமானம் இன்று காலை புறப்படத் தயாரானது. அதி்ல் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.

விமானம் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டு புகை பரவியது. இதைக் கண்ட விமானி உடனடியாக விமானம் டேக்-ஆப் ஆவதைத் தவிர்த்துவிட்டு ரன்வேயிலேயே நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் அவசர. அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் சோதனையிடப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்ட பின் 3 மணி நேரம் தாமதமாக மீண்டும் கிளம்பிச் சென்றது