திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

ஞாயிறு, 27 ஜூன், 2010

ராஜகிரி : திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்

ராஜகிரி : திருச்சி விமான நிலையம் மேம்பாடு கட்டண வசூல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விமானநிலைய மேம்பாடு கட்டணம்  அமலுக்கு வந்தது.திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட பயணிகள் விமானம் மூலம் செல்கின்றனர்.

 தவிர, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள், அண்டை மாநிலங்கள், கோவை, மதுரை, சென்னை விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

திருச்சி விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய "டெர்மினல்' கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. புதிய "டெர்மினல்' கட்டப்பட்டதை முன்னிட்டு, பயணிகளிடமிருந்து விமான நிலையம் மேம்பாடு கட்டணம் வசூலிக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.



 ஜூன் 15ம் தேதி  முதல் தொடர்ந்து பத்து ஆண்டு பயணிகளிடம் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குழந்தைகள், விமான நிலையத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் உள்பட சிலருக்கு மட்டும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரையறைகளை விமான நிலையம் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த கட்டணம் விமான டிக்கெட்டிலேயே சேர்க்கப்படும்.

விமான டிக்கெட்டில் சேர்க்கப்படாத பயணிகளிடம் வசூலிப்பதற்காக மூன்று கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்டர்களில் விமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. புதிய கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பயணிகளிடம் புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டது.





உள்நாட்டில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 150 ரூபாயும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு 360 ரூபாய் என விமான நிலைய மேம்பாடு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக