திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்
மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ பிடித்ததாக எழும்பிய தவறான அலாரத்தினால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்கும் ஓடியதிலும், மேலே இருந்து குதித்ததிலும் 15 பேர் காயமுற்றனர். சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இரவில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு : ஜெட் ஏர்வேஸ் ( 9 w 2302 ) விமானம் நேற்று மும்பையில் இருந்து 9 மணி அளவில் புறப்பட்டது . இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். மேலே கிளம்பிய சில நிமிடத்தில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீ பிடிப்பதாக சில பயணிகள் தெரிவித்தனர்.

பைலட்டுக்கு தெரிய வந்ததும் அவர் அபாய அலாரம் எழுப்பினார். பயணிகள் வெளியேறுமாறு கமாண்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிலருக்கு எலும்பு முறிவு: இதனையடுத்து இந்த அலார சப்தம் கேட்டதும் பயணிகள் பரிதவித்து போயினர். என்ன நடக்கப்போகிறதோ என மனம் பதை, பதைத்ததும் , பயணிகள் விமானத்திற்குள் இருந்து அங்கும், இங்குமாக ஓடினர். சில பயணிகள் கீழே குதித்தனர்.

இதனையடுத்து விமானம் அவசர, அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அனைத்து விமானிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 15 பயணிகள் காயமுற்றனர். 5 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

விமானத்தில் தீ எதுவும் பிடிக்கவில்லை, தீ போல ஒளி தெரிந்துள்ளது. இதனை தீ என பயணிகள் கருதி விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அலாரம் எழுப்பப்பட்டது என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. சென்னை வரவிருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு தாமதமாக நள்ளிரவில் 2 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.

சென்னை வந்த பயணியில் ஒருவர் கூறுகையில்; நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளோம். புகை வந்த விஷயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால் எல்லோரும் உயிரை காப்பாற்றிட என்ன செய்வது என்று திகைத்து போனோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக