திருச்சி விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

Flight

செவ்வாய், 22 மார்ச், 2011

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

இஷ்டத்துக்கும் கட்டணத்தை ஏற்றும் தனியார் விமான நிறுவனங்கள்

பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் இஷ்டத்துக்கும் கட்டணங்களை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளன தனியார் விமான நிறுவனங்கள்.
கடந்த தீபாவளி சீஸனில் பல மடங்கு கட்டணங்களை ஏற்றி வசூல் பார்த்தன இந்த விமான நிறுவனங்கள். டெல்லி - மும்பை மார்க்கத்தில் 5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலித்தனர். இதைத் தொடர்ந்து அரசு தலையிட்டு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியது.
இப்போது, ஹோலி பண்டிகை சீஸன் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது டெல்லி, மும்பை, லக்னோ, புனே உள்ளிட்ட செக்டார்களில். இந்த மார்க்கத்தில் செல்லும் தனியார் விமானங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. கோ ஏர் போன்ற குறைந்த கட்டண விமானங்களில் 200 சதவீத உயர்வு காணப்பட்டது.
டெல்லி - மும்பைக்கு வெள்ளிக்கிழமை மாலை ஜெட் ஏர்வேஸில் ரூ 16,400 வசூலித்தனர். கிங் பிஷரில் ரூ 14800 வசூலிக்கப்பட்டது. சாதாரண நாட்களில் இந்த மார்க்கத்தில் அதிகபட்ச கட்டணமே ரூ 5000 முதல் 6000க்குள்தான். வழக்கமாக ரூ 4000 வசூலிக்கும் கோஏர், இந்த வார இறுதியில் ரூ 9,706 வசூலித்தது.
இதேபோல டெல்லி - லக்னோவுக்கு சாதாரண நாட்களில் ரூ 3000க்குள்தான் கட்டணம் இருக்கும். ஆனால் இந்த முறை ரூ9000க்கும் அதிகமாக வசூலித்தனர். அதிலும் கோ ஏர் விமானத்தில் மட்டும் ரூ 14306 வசூலித்தது பயணிகளை அதிர வைத்தது.
அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிலையான ஒரு கட்டண விகிதத்தை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்த விலை உயர்வு பயணிகளை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை ஒன்பதாவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியல், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருளுக்கு கூடுதலாக ரூ.2,104 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் லிட்டர் விமான பெட்ரோல் இப்போது ரூ.53,538-ஆக விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.53,538-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம்தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து விமான சேவை நிறுவனங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக, டிக்கெட் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் எந்த அறிவிப்புமின்றி 2 முறை டிக்கெட் விலையை உயர்த்திவிட்டது நினைவிருக்கலாம்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

பாஸ்போர்ட் சந்தேகமா? டயல் பண்ணுங்க, தகவல் பெறுங்க

பாஸ்போர்ட் சந்தேகமா? டயல் பண்ணுங்க, தகவல் பெறுங்க   பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்கள் மற்றும் விசாரணைக்காக 3 தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது: புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் 3 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 அவற்றில் தொடர்பு கொண்டால் சந்தேகங்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பெறுதல் குறித்த சந்தேகங்களை 0431-2700699, 2707203, 2707404 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம். அலுவலக நாட்களில் இந்த தொலைபேசிகளை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்

சென்னை வந்த விமானத்தில் தீ ? உயிரை காப்பாற்ற குதிக்க முயன்ற பயணிகள் காயம்
மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ பிடித்ததாக எழும்பிய தவறான அலாரத்தினால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்கும் ஓடியதிலும், மேலே இருந்து குதித்ததிலும் 15 பேர் காயமுற்றனர். சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இரவில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு : ஜெட் ஏர்வேஸ் ( 9 w 2302 ) விமானம் நேற்று மும்பையில் இருந்து 9 மணி அளவில் புறப்பட்டது . இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். மேலே கிளம்பிய சில நிமிடத்தில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீ பிடிப்பதாக சில பயணிகள் தெரிவித்தனர்.

பைலட்டுக்கு தெரிய வந்ததும் அவர் அபாய அலாரம் எழுப்பினார். பயணிகள் வெளியேறுமாறு கமாண்டர் உத்தரவிட்டுள்ளார்.

சிலருக்கு எலும்பு முறிவு: இதனையடுத்து இந்த அலார சப்தம் கேட்டதும் பயணிகள் பரிதவித்து போயினர். என்ன நடக்கப்போகிறதோ என மனம் பதை, பதைத்ததும் , பயணிகள் விமானத்திற்குள் இருந்து அங்கும், இங்குமாக ஓடினர். சில பயணிகள் கீழே குதித்தனர்.

இதனையடுத்து விமானம் அவசர, அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அனைத்து விமானிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 15 பயணிகள் காயமுற்றனர். 5 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

விமானத்தில் தீ எதுவும் பிடிக்கவில்லை, தீ போல ஒளி தெரிந்துள்ளது. இதனை தீ என பயணிகள் கருதி விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அலாரம் எழுப்பப்பட்டது என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. சென்னை வரவிருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு தாமதமாக நள்ளிரவில் 2 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.

சென்னை வந்த பயணியில் ஒருவர் கூறுகையில்; நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளோம். புகை வந்த விஷயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால் எல்லோரும் உயிரை காப்பாற்றிட என்ன செய்வது என்று திகைத்து போனோம் என்றார்.